search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் ஹலெப், வோஸ்னியாகி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் ஹலெப், வோஸ்னியாகி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு சிமோனா ஹலெப், கரோலின் வோஸ்னியாகி ஆகியோர் முன்னேறியுள்ளனர். #QatarOpen2018 #CarolineWozniacki #SimonaHalep
    தோகா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் அந்நாட்டின் தோகா நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி ரோமானியாவின் மோனிகா நிகுலெஸ்குவை எதிர்கொண்டார்.

    இப்போட்டியின் முதல் செட்டை 7-5 என வோஸ்னியாகி போராடி கைப்பற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டையும் 6-1 என கைப்பற்றினார். இதன்மூலம் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற வோஸ்னியாகி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், சிமோனா ஹலெப்பும், லடிவியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவாவும் மோதினர். இதில் அதிரடியாக விளையாடிய ஹலெப் முதல் இரண்டு செட்டையும் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    மற்றொரு போட்டியில் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பிளிஸ்கோவா, அமெரிக்காவின் சிசி பெல்லிசிடம் 6-7, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார்.

    இதுதவிர முகுருசா, ஜோனா கோண்டா ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஏஞ்செலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறினார். #QatarOpen2018 #CarolineWozniacki #SimonaHalep #tamilnews
    Next Story
    ×