search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின் மற்றும் ஜடேஜா ஒருநாள் அணிக்கு திரும்பும் வாய்ப்பே இல்லை- முன்னாள் வீரர்
    X

    அஸ்வின் மற்றும் ஜடேஜா ஒருநாள் அணிக்கு திரும்பும் வாய்ப்பே இல்லை- முன்னாள் வீரர்

    குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்கு காயம் ஏற்படும்வரை, அஸ்வின் அல்லது ஜடேஜாவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை.
    இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா. இருவரும் தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்காமல் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இருவரும் நீக்கப்பட்டதற்கு விமர்சனம் எழும்பிய போதிலும், இந்திய அணி அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது என்று சமாளித்தது.

    ஆனால் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இலங்கை, ஆஸ்திரேலியா தொடரில் அட்டகாசம் செய்த இருவரும் தற்போது தென்ஆப்பிரிக்கா தொடரில் கலக்கி வருகிறார்கள்.

    இதனால் அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. குல்தீப் யாதவ் - சாஹல் ஜோடி தென்ஆப்பிரிக்கா தொடரில் 5 போட்டிகளில் 30 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது.

    இந்நிலையில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்படும் வரை அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகியோருக்கு அணியில் இடமில்லை என்று முன்னாள் வீரர் அதுல் வாசன் கூறியுள்ளார்.



    இதுகுறித்து அதுல் வாசன் கூறுகையில் ‘‘ராஜதந்திர அடிப்படையில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என ரசிகர்கள் நினைக்கலாம். ஆனால், சாஹல் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே இவர்களுக்கு வாய்ப்பு. இல்லையெனில் அணியில் இடம்பிடிக்க முடியாது.

    சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் வெற்றிக்காக அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்குதான் நன்றி சொல்லனும். ரிஸ்ட் ஸ்பின்னர்களாக இருவரும் சிறப்பாக பந்தை டெலிவரி செய்கிறார்கள்.

    அணி நிர்வாகம் உலகக்கோப்பைக்கு முன் மாறுபட்ட சூழ்நிலையுள்ள இடத்தில் குறைந்தது 50 முதல் 60 போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும். நான்காவது போட்டியில் பந்துகள் அடிபட்டாலும் இருவரும் அதுகுறித்து பயப்படவில்லை. வலிமையான இதயத்தை பெற்றுள்ளனர்’’ என்றார்.
    Next Story
    ×