search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரப்பு டி20யில் ஆஸ்திரேலியாவிற்கு 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
    X

    முத்தரப்பு டி20யில் ஆஸ்திரேலியாவிற்கு 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    மெல்போர்னில் நடைபெற்று வரும் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #AUSvENG
    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மேல்போர்னில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் 8 ரன்னிலும், ஹேல்ஸ் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.



    அடுத்து வந்து தாவித் மலன் 10 ரன்னிலும், வின்ஸ் 21 ரன்னிலும் வெளியேறினார்கள். அதன்பின் வந்த பட்லர் 46 ரன்களும், பில்லிங்ஸ் 29 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும், ஸ்டேன்லேக் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.  #AUSvENG #Twenty20TriSeries #ENGvAUS
    Next Story
    ×