search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகிறார் லசித் மலிங்கா
    X

    மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகிறார் லசித் மலிங்கா

    மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். #IPL2018 #LasithMalinga #MumbaiIndians #BowlingMentor

    மும்பை:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் பெங்களூருவில் கடந்த 27, 28-ம் தேதிகளில் நடைபெற்றது. 

    இந்த ஏலத்தில் பல முன்னணி வீரர்களை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. அந்த வகையில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்காவை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. கடந்த 2009-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் அவரை எடுக்காததால் மும்பை அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவரது ஐ.பி.எல். வாழ்க்கை முடிந்துவிட்டதாவே கருதப்பட்டது. 

    இந்நிலையில் லசித் மலிங்கா, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மும்பை அணிக்காக 110 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவரையே சேரும். அவர் இதுவரை 149 விக்கெட்கள் எடுத்துள்ளார்.



    இதுகுறித்து மலிங்கா கூறுகையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ள சிறப்பான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மும்பை எனது இரண்டாவது வீடாக இருந்து வந்தது. ஒரு வீரராக, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணம் செய்துவந்தேன். இப்போது பந்துவீச்சு ஆலோசகராக தொடர உள்ள புதிய பயணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன், என்றார்.

    மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக மகிலா ஜெயவர்தனேவும், பந்துவீச்சு பயிற்சியாளராக ஷேன் பாண்ட்டும், பேட்டிங் பயிற்சியாளாராக ராபின் சிங்கும், பீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் பெம்மெட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பை அணியின் தலைமை ஆலோசகராக முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #LasithMalinga #MumbaiIndians #BowlingMentor
    Next Story
    ×