search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித்துக்கு ஒரு நல்ல இன்னிங்ஸ் தேவை: தவான்
    X

    ரோகித்துக்கு ஒரு நல்ல இன்னிங்ஸ் தேவை: தவான்

    தென்ஆப்பிரிக்கா தொடரில் ரோகித் சர்மா மோசமாக விளையாடுவது குறித்து கவலைப்பட தேவையில்லை என தொடக்க பேட்ஸ்மேன் தவான் கூறியுள்ளார். #SAvIND
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பன், செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது.

    நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் தொடரில் 3-0 என முன்னிலைப் பெற்று தொடரை இழக்காத நிலை ஏற்படும். இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா முதல் இரண்டு டெஸ்டிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை.

    தென்ஆப்பிரிக்கா மண்ணில் பார்ம் இன்றி தவிக்கும் ரோகித் சர்மா குறித்து கவலைப்பட தேவையில்லை என்று தவான் கூறியுள்ளார்.

    இதுகுறித்து தவான் கூறுகையில் ‘‘சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பிளாட் பிட்சியில் கூட பந்தை டர்ன் செய்வதால் அவர்களை எதிர்கொள்வது கடினம். அவர்களை வெளிநாட்டு வீரர்கள் எதிர்கொள்வது கடினம். ஏனென்றால், அவர்கள் இதுபோன்ற டர்ன் பந்தை அவர்கள் விளையாடியது கிடையாது. இரண்டு பந்து வீச்சாளர்களின் பந்தை கணிப்பது மிகவும் கடினம். சாஹலின் கூக்லி பந்தை கணிக்க தவறி விடுகிறார்கள்.



    ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுகிறார் என்று நான் உணர்கிறேன். கடந்த போட்டியில் கூட ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக அவர் அவுட்டாகி விட்டார். அவருடைய பேட்டிங் குறித்து கணக்கில் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

    சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து தற்போது வரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சில சமயம் ரன்கள் குவிக்க இயலாமல் போய்விடும். இதனால் அவரது பார்ம் குறித்து பெரிய அளவில் கவலைப்பட தேவையில்லை. ஒரு இன்னிங்சில் சிறப்பாக விளையாடினால், அனைத்து பிரச்சினையும் தீர்ந்து விடும்’’ என்றார்.
    Next Story
    ×