search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ்: முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது அடிலெய்டு
    X

    பிக் பாஷ்: முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது அடிலெய்டு

    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ். #BBLFinal #AAvHH
    பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்றது. இதில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் விக்கெட் கீப்பர் கேரி, வெதரால்டு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கேரி 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் டிராவிஸ் 29 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார்.

    வெதரால்டு அபாரமாக விளையாடி 70 பந்தில் 9 பவுண்டரி, 8 சிக்சருடன் 115 ரன்கள் குவித்தார். இவரது சதத்தால் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.

    பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியி்ன பெய்ன், டி'ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெய்ன் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஷார்ட் உடன் கேப்டன் பெய்லி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 10.2 ஒவரில் 87 ரன்கள் எடுத்திருக்கும்போது பெய்லி 33 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த மெக்டெர்மோட் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஷார்ட் 44 பந்தில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    அதன்பின் வந்த வீரர்களால் ஜொலிக்க முடியாததால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சதம் அடித்த வெதரால்டு ஆட்டநாயகன் விருதையும், ஹோபர்ட் அணியின் ஷார்ட் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.

    அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதல் சீசனில் 6-வது இடத்தையும், 2-வது வீசினில் 5-வது இடத்தையும், 3-வது சீசனில் 7-வது இடத்தையும், 4-வது மற்றும் 5-வது சீசனில் அரையிறுதிக்கும், 6-வது சீசனில் 6-வது இடத்தையும் பிடித்திருந்தது. தற்போது முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளது. #BBLFinal #AAvHH
    Next Story
    ×