search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் உலகக் கோப்பையை வெல்லுமா இந்தியா? - 217 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸி.
    X

    ஜூனியர் உலகக் கோப்பையை வெல்லுமா இந்தியா? - 217 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸி.

    ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிற்கு 217 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. மெரியா 76 ரன்கள் எடுத்தார். #U19WCFinal #AUSvIND
    மவுன்ட் மானுங்கா:

    நியூசிலாந்தில் நடந்து வரும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், அரை இறுதியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதும் இப்போட்டி மவுன்ட் மாங்கானுவில் இந்திய நேரப்படி 6:30 மணிக்கு தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஜெசன் சங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக எட்வர்ட்ஸ், பிரையன்ட் களமிறங்கினர்.  பிரையன்ட் 3 பவுண்டரிகள் உள்பட 14 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார். எட்வர்ட்ஸ் 5 பவுண்டரிகளுடன்28 ரன்கள் சேர்த்த நிலையில், போரெல் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 3-வது விக்கெட்டான சங்கா 13 ரன்களில் ஏமாற்றம் அளித்தார்.



    அதன்பின்னர் 4-வது விக்கெட்டு ஜோடியான மெரியோ-உப்பல் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. மெரியோ அரை சதம் கடந்தார். உப்பல் 38 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின்னர் மெரியோவுடன் மெக்ஸ்வீனி இணைய மீண்டும் ஆட்டம் சூடுபிடித்தது. மெக்ஸ்வீனி 23 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த சதர்லேண்ட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதற்கிடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெரியோ 76 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து ஏவான்ஸ் மற்றும் ஹேட்லி இருவரும் தலா ஒரு ரன் மட்டுமே எடுக்க, ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் போரெல், சிவா சிங், நாகர்கோட்டி மற்றும் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சிவம் மாவி ஒரு விக்கெட் எடுத்தார்.



    இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடி வருகிறது. #U19WCFinal #AUSvIND #U19CWC
    Next Story
    ×