search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    U-19 உலக கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
    X

    U-19 உலக கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

    U-19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. #IndVsAus #U19CWC

    மவுன்ட் மாங்கானு:

    நியூசிலாந்தில் நடந்து வரும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்துவிட்டது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், அரைஇறுதியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதும் மவுன்ட் மாங்கானுவில் இந்திய நேரப்படி 6:30 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஜெசன் சங்கா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணி: ப்ரித்வி ஷா (கேப்டன்), மஞ்சோத் கல்ரா, ஷுப்மான் கில், ஹர்விக் தேசாய் (விக்கெட்கீப்பர்), ரியான் பராக், அபிஷேக் ஷர்மா, அனுகுல் ராய், கமலேஷ் நகர்கோட்டி, ஷிவம் மாவி, சிவா சிங், இஷான் போரெல்

    ஆஸ்திரேலியா அணி: ஜாக் எட்வர்ட்ஸ், மேக்ஸ் பிரையன்ட், ஜேசன் சங்கா (கேப்டன்), ஜொனதன் மெர்லோ, பரம் உப்பால், நாதன் மெக்ஸ்வீனி, வில் சதர்லேண்ட், பாக்ஸ்டர் ஜே ஹோல்ட் (விக்கெட்கீப்பர்), ஜாக் எவான்ஸ், ரியான் ஹாட்லி, லாயிட் போப்

    #IndVsAus 
    Next Story
    ×