search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக்பாஷ்: 1 ரன்னில் தப்பித்து முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அடிலெய்டு
    X

    பிக்பாஷ்: 1 ரன்னில் தப்பித்து முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அடிலெய்டு

    பிக் பாஷ் டி20 லீக்கில் ஒரு ரன் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ்-ஐ வீழ்த்தி அடிலெய்டு ஸ்டிரைக்கர் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. #BigBash
    ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக்கின் 2017-18 சீசன்  நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று 2-வது அரையிறுதி ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின.

    அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. வெதரால்டு (57), டிராவிஸ் ஹெட் (85 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

    பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி களம் இறங்கியது. கேமருன் ஒயிட், ஹாரிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கேமருன் ஒயிட் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹாரிஸ் உடன் லுட்மான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. ஹாரிஸ் 45 ரன்களும், லுட்மான் 28 ரன்களும் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தார்.

    5-வது விக்கெட்டுக்கு கூப்பருடன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இணையும்போது மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 15.2 ஓவரில் 139 ரன்கள் எடுத்திருந்தது.

    அணியின் வெற்றிக்கு 28 பந்தில் 40 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் அணியை வெற்றி வைத்திவிடுவார்கள் என்ற ரெனிகேட்ஸ் அணி நம்பியது.

    மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 16 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. கூப்பர் 29 ரன்னுடனும், பொல்லார்டு 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    17-வது ஓவரை இங்ராம் வீசினார். இந்த ஓவரில் பவுண்டரி அடிக்காவிடிலும் 9 ரன்கள் கிடைத்தது. 18-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் பொல்லார்டு ஒரு சிக்ஸ் விளாசினார். இருந்தாலும் மற்ற பந்து சிறப்பாக வீச 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பொல்லார்டு 5 பந்தில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது ரெனிகேட்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

    கடைசி இரண்டு ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை நேசர் வீசினார். மிகவும் சிறப்பாக வீசிய நேசர் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 6 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது.


    28 ரன் அடித்த லுட்மான்

    கடைசி ஓவரை லாப்லின் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பொல்லார்டு பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்தார். இதனால் கடைசி நான்கு பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தில் கூப்பர் ஒரு ரன் அடிக்க, 4-வது பந்தில் பொல்லார்டு 2 ரன்கள் அடித்தார்.

    கடைசி இரண்டு பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் பொல்லார்டு இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் டை, மூன்று ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தை பொல்லார்டு சந்தித்தார். பொல்லார்டு கடைசி பந்தை தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படவில்லை. இதனால் லெக்பை மூலம் ஒரு ரன் எடுத்தனர்.

    ஆகவே பரபரப்பான ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.
    Next Story
    ×