search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரவில் காவல், பகலில் கிரிக்கெட்: கஷ்டப்பட்டு முன்னேறி ஐபிஎல் அணியில் இடம் பிடித்த வீரர்
    X

    இரவில் காவல், பகலில் கிரிக்கெட்: கஷ்டப்பட்டு முன்னேறி ஐபிஎல் அணியில் இடம் பிடித்த வீரர்

    இரவு நேரத்தில் செக்யூரிட்டியாக வேலைப் பார்த்துக் கொண்டு பகலில் கிரிக்கெட் விளையாடி, ஐபில் அணிக்கு தேர்வாகியுள்ளார் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் தார்.
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதில் பல வீரர்கள் பல கோடி ரூபாய்க்கும், பல வீரர்கள் சொற்ப விலைக்கும் ஏலம் போனார்கள். கஷ்டப்பட்டு கடின உழைப்பின் மூலம் கிரிக்கெட் விளையாட்டிற்குள் நுழைந்த வீரர்கள் சில கண்ணில் தென்பட்டனர். இதில் கிங்ஸ் லெவன் பங்சாப் அணி வாங்கியுள்ள காஷ்மீரைச் சேர்ந்த மன்சூர் தாரும் ஒருவர். இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் காஷ்மீர் இருந்து எடுக்கப்பட்ட ஒரே வீரர் மன்சூர் தார்தான். இவரை 20 லட்சம் கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.

    மாநில அணியில் இடம் பெற்று இவர் அடித்த 100 மீட்டர் சிக்கர்தான் ஐபிஎல் அணிகளுக்கு அறியச் செய்தது. இவர் 9 போட்டிகளில் விளையாடி 185 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 14 பவுண்டரி, 13 சிக்சர் அடங்கும்.

    நல்ல ஷூ வாங்குவதற்கே கஷ்டப்பட்ட நிலையில் இருந்து, மாநில வீரராக மாறிய மன்சூர் தார் ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பது குறித்து கூறுகையில் ‘‘இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இறைவனுக்கு உண்மையிலேயே நன்றி தெரிவிக்கிறேன். மேலும் கிங்ஸ் லெவன் அணிக்கும், பிரீத்தி ஜிந்தாவுக்கும் நன்றி. இறுதியாக நான் ஒரு அணியில் ஏலம் எடுக்கப்படும் வரைக்கும், என்னுடைய வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. வீட்டின் வறுமைச் சூழலால் தினக் கூலியாக 60 ரூபாய்க்கு வேலைக் சென்றதை நினைத்துப் பார்க்கிறேன்.

    இந்த செய்தியை என் தாயிடம் கூறினேன். அதன்பிறகு ஏறக்குறைய 30 ஆயிரம் பேர் என்னுடைய வீட்டுக்கு வந்து வாழ்த்து தெரிவித்து சென்றதாக என்னுடைய அம்மா கூறினார். இந்த அன்பை பெற்றது மகிழ்ச்சியான தருணம்.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை தனியார் நிறுவனங்களில் இரவு நேர காவலராக பணியாற்றி பகலில் கிரிக்கெட் விளையாடுவேன். நான் கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்த ஒரு வழி மட்டுமே இருந்தது. ஆனால், இந்த நேரத்தில் கிளப் கிரிக்கெட்டில் எனது பெயர் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன்.



    எவ்வளவு முடியோ அவ்வளவு போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதுதான் எனது இலட்சியமாக இருந்தது. ஏனென்றால் அப்போதுதான் பணம் அதிகமாக கிடைக்கும். என்னுடைய முதல் கிளப் கிரிக்கெட்டை தொடங்கும்போது ஷூ வாங்குவதற்குக் கூட பணம் கிடையாது.

    2011-ம் ஆண்டு வரை கிரிக்கெட் எனது வாழ்க்கையின் நீண்ட கால தேர்வாக இருக்கும் என்று நினைக்கவில்லை. அப்போதுதான் நான் முதன்முறையாக மாநில அணிக்கான பயிற்சியில் ஈடுபட்டேன். ஆனால் 2017-ல்தான் அறிமுகம் ஆக முடிந்தது. இதுவரை 9 டி20 மற்றும் நான்கு லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி உள்ளேன்.

    இன்றைய கிரிக்கெட் உலகில் ரூ.20 லட்சம் என்பது மிகப்பெரிய தொகை இல்லை என்கிறபோதிலும், மூன்று வருடமாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டில் இன்னும் ஜன்னல், கதவு வேலைகள் முடியவில்லை. அதை செய்வேன். உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் எனது தாய்க்கு சிகிச்சை அளிப்பேன்.

    கபில்தேவ் மற்றும் டோனியை போன்று விளையாட வேண்டும் என்று ஆசை. நான் எப்போதும் டோனியை போன்று சிக்ஸ் அடிக்க விரும்புவேன்’’ என்றார்.
    Next Story
    ×