search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018: ஏலத்தில் விலைபோகாத சில முன்னணி வீரர்கள்
    X

    ஐபிஎல் 2018: ஏலத்தில் விலைபோகாத சில முன்னணி வீரர்கள்

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இரண்டு நாள் ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் சில முன்னணி வீரர்கள் எந்த அணியிலும் ஏலம் எடுக்கப்படாமல் உள்ளனர். #IPLAuction #IPL2018 #UnAuctioned

    பெங்களூரு:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு அனுப்பப்பட்டனர்.

    ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. 360 இந்தியர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல் நாள் ஏலத்தில் 78 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் நாள் ஏலம் இன்று நடைபெற்றது. இன்று 91 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இத்துடம் மொத்தமாக இரண்டு நாள் ஏலத்தில் 56 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 169 பேர் ரூ. 431.70 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில் ஜேம்ஸ் பால்க்னர், இயான் மார்கன், அஞ்ஜெலோ மேத்திவ்ஸ், ஜோ ரூட், சாமுவெல் பத்ரி, லசித் மலிங்கா உள்ளிட்ட முன்னணி வீரர்களை எடுக்க எந்த அணியும் தயாராக இல்லை. 

    அந்த வகையில் ஏலம் எடுக்கப்படாத சில முன்னணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா:

    மொகமது ஷம்மி
    செட்டேஷ்வர் புஜாரா
    இஷாந்த் சர்மா
    இர்பான் பதான் 
    அசோக் டிண்டா
    பிரவீன் குமார்
    வருண் ஆரோன்
    முனாப் பட்டேல்


    வெஸ்ட் இண்டிஸ்:

    ஜான்சன் சார்லஸ்
    ஜேசன் ஹோல்டர்
    லெண்டில் சிம்மன்ஸ்
    சாமுவெல் பத்ரி, 
    வெய்ன் ஸ்மித்
    டேரன் பிராவோ
    டேரன் சம்மி
    ஜெரோம் டெய்லர்
    மார்லன் சாமுவெல்ஸ்


    ஆஸ்திரேலியா:

    ஜேம்ஸ் பால்க்னர்
    ஜோஷ் ஹேசில்வுட்
    கேமரான் ஒயிட்
    மோசஸ் ஹென்ரிகஸ்
    ஷான் மார்ஷ்
    மைக்கெல் கிளிங்கர்
    நாதன் லையன்
    பீட்டர் ஹண்ட்ஸ்கோம்ப்
    ஆடம் சாம்பா
    பீட்டர் சிடில்
    உஸ்மான் கவாஜா
    ஜான் ஹேஸ்டிங்ஸ்
    சீன் அபோட்
    பென் ஹில்பெனாஸ்


    தென்னாப்ரிக்கா:

    டின் எல்கர்
    மார்னே மார்கல்
    டேல் ஸ்டெயின்
    ஹாசிம் அம்லா
    கைல் அபோட்
    வெய்ன் பர்னெல்
    மெர்சண்ட் டி லேங்
    ரீசா ஹெண்ட்ரிக்ஸ்
    வெர்னான் பிளாண்டர்


    நியூசிலாந்து:

    லூக் ராங்கி
    கோரி ஆண்டர்சன்
    கொலின் இங்கிராம்
    மைக்கெல் மெக்லெனகன்
    மார்டின் கப்தில்
    லாக்கி பெர்குசன்
    ராஸ் டெய்லர்
    ஆடம் மில்னே
    இஷ் சோடி


    இங்கிலாந்து:

    ஜோ ரூட், 
    இயான் மார்கன், 
    டேவிட் வில்லி,
    லியாம் பிளங்கீட்
    ரவி பொபாரா
    ஜானி பேர்ஸ்டோ
    ஸ்டீவன் பின்
    தைமால் மில்ஸ்
    அலெக்ஸ் ஹேல்ஸ்
    டாம் குர்ரன்
    அடில் ரஷித்
    சமித் பட்டேல்
    ஹாரி குர்னி


    இலங்கை:

    அஞ்ஜெலோ மேத்திவ்ஸ், 
    லசித் மலிங்கா
    திசாரா பெரேரா
    உபுல் தரங்கா
    நிரோசன் டிக்வெல்லா

    சபீர் ரஹ்மான் (வங்காளதேசம்)
    பால் ஸ்டெர்லிங் (அயர்லாந்து)
    தவ்லத் சத்ரான் (ஆப்கானிஸ்தான்)

    #IPLAuction #IPL2018 #UnAuctioned
    Next Story
    ×