search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20: நீண்ட நாளுக்கு பின்னர் இந்திய அணியில் ரெய்னா
    X

    தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20: நீண்ட நாளுக்கு பின்னர் இந்திய அணியில் ரெய்னா

    தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி வீரர் ரெய்னா நீண்ட நாளுக்கு பின்னர் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    மும்பை:

    இந்திய அணி தென்னாப்ரிக்க மண்னில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடந்துள்ள நிலையில், ஒருநாள் தொடர் பிப்ரவரி முதல் தேதியில் தொடங்க உள்ளது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.

    அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா நீண்ட நாட்களுக்கு பின்னர் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகுர் டி20-யில் அறிமுகமாகியுள்ளார்.

    அணி விபரம்:-

    விராட்கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே, அக்‌ஷர் படேல், சாகல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, உனத்கட், சர்துல் தாகூர்


    அறிமுக வீரர் சர்துல் தாகுர்

    Next Story
    ×