search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை சீனியர் கிங்ஸ் ஆக மாறிய சி.எஸ்.கே.
    X

    சென்னை சீனியர் கிங்ஸ் ஆக மாறிய சி.எஸ்.கே.

    பத்தாவது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வயதில் மூத்த வீரர்ளை தேர்வு செய்துள்ளது. #IPLAuction #IPLAuction2018 #CSK
    * சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று எடுத்த 8 வீரர்களும் 30 வயதை கடந்தவர்களே. அதிகபட்சமாக இம்ரான் தாஹிரின் வயது 38.

    * 10 ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய 37 வயதான ஹர்பஜன்சிங், இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்சுக்காக பந்தை சுழட்டப்போகிறார். ரூ.2 கோடிக்கு ஏலம் போன அவர் டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், ‘வணக்கம் தமிழ்நாடு.... உங்க கூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம். உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

    * யுவராஜ்சிங், மறுபடியும் தங்கள் அணிக்கு திரும்பியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். 2015-ம் ஆண்டில் ரூ.16 கோடிக்கு விலை போன யுவராஜ்சிங் இந்தமுறை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.

    *கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து 2 முறை கோப்பையை வென்றுத்தந்த கவுதம் கம்பீரை இந்த முறை அந்த அணி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அவரை தற்போது டெல்லி அணி எடுத்துள்ளது. ‘மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டேன்’ என்று கம்பீர் டுவிட்டரில் கூறியுள்ளார்.  #IPLAuction #IPLAuction2018 #CSK #ChennaiSuperKings #MI #CSK #DD #KKR #RR #RCB #KXIP #SRH
    Next Story
    ×