search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா ஓபன்: ஹலெப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார் வோஸ்னியாகி
    X

    ஆஸ்திரேலியா ஓபன்: ஹலெப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார் வோஸ்னியாகி

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஓற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஹலெப்பை வீழ்த்தி வோஸ்னியாகி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். #CarolineWozniacki #AustraliaOpen

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப்பும், இரண்டாம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாகியும் மோதினர். 



    இப்போட்டியின் முதல் செட்டை வோஸ்னியாகி 7-6 என போராடி கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய ஹலெப், அந்த செட்டை 6-3 என கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டை வோஸ்னியாகி 6-4 என கைப்பற்றினார். இறுதியில் 7-6, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற வோஸ்னியாகி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். 

    இது அவரது முதல் ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் சிலாம் பட்டமாகும். #CarolineWozniacki #AustraliaOpen #WomenSinglesChampion
    Next Story
    ×