search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா ஓபன்: ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    X

    ஆஸ்திரேலியா ஓபன்: ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். #AUSOPEN #RogerFederer

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் தரநிலை பெறாத கொரிய வீரர் சங்-ஐ எதிர்கொண்டார்.

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பெடரர் முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் பெடரர் அதிரடி ஆட்டத்தை வெளிகாட்டினார்.  ஆனால் சங் காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து இடையிலேயே விலகினார். இதனால் பெடரர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 



    நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் - மரின் சிலிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். #AUSOPEN #MarinCilic #RogerFederer
    Next Story
    ×