search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தியது அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ்
    X

    பிக் பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தியது அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ்

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி வெற்றி பெற்றது. #BBL07 #AdelaideStrikers #MelbourneRenegades

    மெல்போர்ன்:

    இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணிகள் மோதின. 

    டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணியின் அலெக்ஸ் கேரி, ஜேக் வெதரால்ட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். வெதரால்ட் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து டிராவிஸ் ஹெட் களமிறங்கினார். கேரி 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்  ஹெட்-உடன், கொலின் இங்கிராம் ஜோடி சேர்ந்தார்.



    இருவரும் அரைசதம் கடந்தனர். ஹெட் 47 பந்துகளில் 58 ரன்கள் (4 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்திருந்த நிலையில் போலார்ட் பந்தில்  ஆட்டமிழந்தார். இங்கிராம் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 68 ரன்கள் (4 பவுண்டரி, 5 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அடிலெய்டு அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. மெல்போர்ன் அணி பந்துவீச்சில் வெய்ன் பிராவோ 2 விக்கெட்களும், கிறிஸ் ட்ரிமெய்ன், ஜாக் வில்டர்மத், போலார்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மார்கஸ் ஹாரிஸ் 25 ரன்களிலும், டிம் லூட்மேன் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தர். அதைத்தொடர்ந்து களமிறங்கியவர்களும் பெரிய அளவில் ரன் எடுக்க தவறிவிட்டனர். இதனால் மெல்போர்ன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடிலெய்டு அணி பந்துவீச்சில் ரஷித் கான், பில்லி ஸ்டான்லேக், பென் லாப்லீன் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், பீட்டர் சிடில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி வெற்றி பெற்றது.



    சிறப்பாக விளையாடி 68 ரன்கள் குவித்த அடிலெய்டு அணியின் கொலின் இங்கிராம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் சிட்னி சிக்ஸர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BBL07 #AdelaideStrikers #MelbourneRenegades
    Next Story
    ×