search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 நாடுகள் ஹாக்கி: ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா
    X

    4 நாடுகள் ஹாக்கி: ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

    நான்கு நாடுகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
    வெலிங்டன்:

    இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி நியூசிலாந்தின் தவுரங்கா நகரில்  நடைபெறுகிறது. இதில், மன்பீரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இன்று தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது.

    ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். முதல் பாதி நேர ஆட்டத்ல் இந்தியா 3 கோல்கள் அடித்ததுடன் ஜப்பானை கோல் போட விடாமல் அபாரமாக தடுத்தனர். இரண்டாவது பாதியில் மேலும் 3 கோல்கள் அடித்த இந்தியா, 6-0 என வெற்றி பெற்றது.

    இந்தியா தரப்பில் ரூபிந்தர் பால் சிங், விவேக் சாகர் பிரசாத், தில்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் கோல்கள் அடித்தனர். #tamilnews
    Next Story
    ×