search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவுட் ஸ்விங், இன் ஸ்விங்: சமிக்ஞை மூலம் ஹர்திக் பாண்டியாவை வழிநடத்திய கோலி
    X

    அவுட் ஸ்விங், இன் ஸ்விங்: சமிக்ஞை மூலம் ஹர்திக் பாண்டியாவை வழிநடத்திய கோலி

    அவுட் ஸ்விங், இன் ஸ்விங் பந்துகளை எப்படி தெரிந்து கொள்வதை தனது சைகை மூலம் ஹர்திக் பாண்டியாவிற்கு உணர்த்தி விராட் கோலி வழிநடத்தியுள்ளார். #SAvIND #ViratKohli #HardikPandya
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அஸ்வினின் அபார பந்து வீச்சால் 335 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய் - விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ஓரளவிற்கு ரன்கள் குவித்தது.

    முரளி விஜய் 46 ரன்களில் ஆட்டமிழந்த பின்னர், இந்தியாவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. 54-வது ஒவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.

    6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். ஆட்டம் முடிய சில ஓவர்களே இருந்தன. இதனால் மேலும் விக்கெட்டுக்களை இழந்து விடக்கூடாது என்பதில் இருவரும் கவனமாக இருந்தனர்.

    அப்போது விராட் கோலியுடன் சென்று பந்து சரியாக தெரியவில்லை. இதனால் ரிவர்ஸ் ஸ்விங் ஆடுவதில் கடினமாக உள்ளது என்றார். உடனே, கோலி என்னால் பந்தை நன்றாக பார்க்க முடியும். நான் உங்களுக்கு தகவல் சொல்கிறேன் என்றார்.

    அதன்படி தனது பேட்டை இடது கையில் வைத்திருந்தால் அது அவுட் ஸ்விங் எனவும், வலது கையில் வைத்திருந்தால் இன் ஸ்விங் எனவும் சமிக்ஞை காட்டினார்.

    56-வது ஓவரை நிகிடி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை நிகிடி அவுட் ஸ்விங்காக வீசினார். விராட் கோலி தனது பேட்டை இடது கையில் வைத்திருந்ததால் நிகிடி பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே ஹர்திக் பாண்டியா ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வந்து பந்தை லீவ் செய்தார். அந்த ஓவர் முழுவதும் அப்படிதான் செய்தார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.



    58-வது ஓவரின் 5-வது பந்திலும் அதேபோல் இன் ஸ்விங் பந்திற்கு சமிக்ஞை காட்டினார். ஹர்திக் பாண்டியா கிரீஸ்-க்குள் நின்று அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

    பின்னர் கையில் பேட்டை வைத்திருப்பதற்குப் பதிலாக காலை வைத்து சமிக்ஞை காட்டினார். போட்டி முடிந்த பின்னர் ஸ்டம்பிள் உள்ள மைக்கை வாய்ஸ்-ஐ ஆராயும்போது இந்த உரையாடல் தெரியவந்துள்ளது.

    இந்திய வீரர்கள் இப்படி செய்வது முதல் முறையல்ல. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சச்சின் தெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் விளையாடும்போது இப்படி நடைபெற்றுள்ளது. கிறிஸ் கெய்ன் பந்து வீசும்போது ராகுல் டிராவிட் பந்து தெரியவில்லை என்ற போது சச்சின் தெண்டுல்கர் டிராவிட்டிற்கு பேட்டை வைத்து அவுட் ஸ்விங் எது, இன் ஸ்விங் எது என்பது குறித்து சமிக்ஞை மூலம் தெரியப்படுத்தியுள்ளார். #SAvIND #ViratKohli #HardikPandya
    Next Story
    ×