search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது சென்னை
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது சென்னை

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை எப் சி அணி 1-0 என்ற கணக்கில் புனே எப் சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
    சென்னை:

    நான்காவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. மற்றும் புனே சிட்டி அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆனாலும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை.

    இதையடுத்து, ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் கிரிகோரி நெல்சன் ஒரு கோல் அடித்து சென்னை எப் சி அணிக்கு முன்னிலை பெற்று தந்தார்.

    புனே அணியால் பதிலுக்கு கோல் அடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, சென்னை எப் சி அணி 1-0 என்ற கணக்கில் புனே எப் சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இதுவரை 10 ஆட்டத்தில் விளையாடி 6 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
    Next Story
    ×