search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் டி20 லீக்: 3 ரன் வித்தியாசத்தில் பெர்த் அணியை வீழ்த்தியது சிட்னி தண்டர்
    X

    பிக் பாஷ் டி20 லீக்: 3 ரன் வித்தியாசத்தில் பெர்த் அணியை வீழ்த்தியது சிட்னி தண்டர்

    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் சிட்னி தண்டர் 3 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை வீழ்த்தியது. #BBL #BighBashLeague
    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் சிட்னி தண்டர் 3 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை வீழ்த்தியது. #BBL #BighBashLeague

    பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சிட்னி தண்டர் - பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கவாஜா, பேட்டர்சன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கவாஜா அதிரடி காட்ட பேட்டர்சன் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் வாட்சன் 1 ரன்னிலும், பெர்குசன் 25 ரன்னிலும் ஆட்டமிழக்க, கவாஜா 51 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 85 ரன்கள் குவித்தார். கவாஜா அதிரடியால் சிட்னி தண்டர் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.

    பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணி பேட்டிங் செய்தது. பொசிஸ்டோ, கிலிங்கெர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பொசிஸ்டோ 9 ரன்னிலும், கிலிங்கெர் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த விக்கெட் கீப்பர் பான்கிராப்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்குப்பின் வந்த டர்னர் 3 ரன்னிலும், கேப்டன் வோக்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க 5-வது விக்கெட்டுக்கு பான்கிராப்ட் உடன் கார்ட்ரைட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    பெர்த் ஸ்கார்செர்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 24 பந்தில் 63 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரை சிட்னி தண்டரின் க்ரீன் வீசினார். இந்த ஓவரில் பெர்த் ஸ்கார்செர்ஸ் இரண்டு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் விளாசியது.

    இதனால் கடைசி 18 பந்தில் 44 ரன்கள் தேவைப்ப்பட்டது. 18-வது ஓவரை மெக்கிளெனகன் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்ததால் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிக்கு 13 ரன்களே கிடைத்தது.

    இதனால் கடைசி இரண்டு ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சந்து வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் மட்டுமே பெர்த் ஸ்கார்செர்ஸ் எடுத்தது. சந்துவின் அபார பந்து வீச்சால் சிட்னி தண்டர் அணி பெருமூச்சு விட்டது.


    75 ரன்கள் சேர்த்த பான்கிராப்ட்

    கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. கார்ட்ரைட் முதல் பந்தில் பவுண்டரியும், 2-வது பந்தில் சிக்சருடம் விளாசினார். 3-வது பந்தை நோ-பால் ஆக வீசினார். இதனால் முதல் மூன்று பந்தில் பெர்த் ஸ்கார்செர்ஸ் 15 ரன்கள் அடித்தது.

    கடைசி மூன்று பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் கார்ட்ரைட் 2 ரன்னும், ஐந்தாவது பந்தில் 2 ரன்னும் எடுத்தது. இதனால் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பெர்த் ஸ்கார்செர்ஸ் 1 ரன்னே அடித்தது. இதனால் சிட்னி தண்டர் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கார்ட் ரைட் 41 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 65 ரன்னும், பான்கிராப்ட் 56 பந்தில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 75 ரன்னும் எடுத்து அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. #BBL #BighBashLeague
    Next Story
    ×