search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: நார்த் ஈஸ்டர்ன் வாரியர்சை வீழ்த்தியது டெல்லி டாஷர்ஸ்
    X

    பிரிமியர் பேட்மிண்டன் லீக்: நார்த் ஈஸ்டர்ன் வாரியர்சை வீழ்த்தியது டெல்லி டாஷர்ஸ்

    பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடரின் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்சை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி டெல்லி டாஷர்ஸ் அணி வெற்றி பெற்றது. #VodafonePBL #DelhiDashers #NorthEasternWarriors

    சென்னை:

    3-வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் ஜனவரி 14-ந் தேதி வரை சென்னை, கவுகாத்தி, டெல்லி, லக்னோ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், லக்னோ அவாதே வாரியர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி டாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    கடைசி சுற்று ஆட்டங்கள் ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி டாஷர்சும், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்சும் மோதின.

    முதல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டெல்லியின் தியான் ஹோவே, நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியின் வாக் சூ வேவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தை நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் துருப்பு ஆட்டமாக தேர்ந்தெடுத்திருந்தது. இதில் தியான் ஹோவே, 15-10, 8-15, 15-11 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.

    இரண்டாவது ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டெல்லியின் வாங் விங் கி வின்செண்ட், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்சின் அஜய் ஜெய்ராம் ஆகியோர் மோதினர். இதில் வாங் விங் கி வின்செண்ட், 15-13, 10-15, 15-12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். 



    பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டெல்லி அணியின் சங் ஜி ஹியூன், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியின் மிச்செல் லீயை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியை டெல்லி அணி துருப்பு ஆட்டமாக தேர்ந்தெடுத்து விளையாடியது. இதில் 13-15, 15-11, 15-13 என்ற செட் கணக்கில் சங் ஜி ஹியூன் வென்றார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் டெல்லியின் விளாடிமிர் இவனோவ் - இவான் சொசோனோவ் ஜோடி, நார்த் ஈஸ்டர்ன் வாரியர்சின் கிம் ஜி ஜங் - ஷின் பேக் சியொல் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 9-15, 15-10, 15-9 என்ற செட்களில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

    கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் டெல்லியின் விளாடிமிர் இவனோவ் - அஷ்வினி போபண்ணா ஜோடி, நார்த் ஈஸ்டர்ன் வாரியர்சின் கிம் ஜி ஜங் - மிச்செல் லீ ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 15-13, 15-11 என்ற நேர் செட்களில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.



    நேற்றைய போட்டிகளின் முடிவில் டெல்லி டாஷர்ஸ் அணி 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் கடைசி நாள் லீக் போட்டிகளில் ஐதராபாத் ஹண்டர்ஸ் - பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிகள் விளையாட உள்ளன. அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி டாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. #VodafonePBL #DelhiDashers #NorthEasternWarriors
    Next Story
    ×