search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூனியர் உலக கோப்பை பயிற்சி கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
    X

    ஜூனியர் உலக கோப்பை பயிற்சி கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

    ஜூனியர் உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிக்காவை 189 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. #SAvIND #U19CWC
    கிறைஸ்ட்சர்ச்:

    16 அணிகள் இடையிலான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 3-ந்தேதி வரை நியூசிலாந்தில் நடக்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்தது. அர்யான் ஜூயல் (86 ரன்), ஹிமன்ஷூ ராணா (68 ரன்) அரைசதம் விளாசினர். கேப்டன் பிரித்வி ஷா (16 ரன்) ஏமாற்றம் அளித்தார்.

    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 38.3 ஓவர்களில் 143 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 189 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. இந்திய பவுலர்களில் இஷன் போரெல் 4 விக்கெட்டுகளும், நாகர்கோடி, ஷிவசிங், அபிஷேக் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணி இன்றைய பயிற்சி ஆட்டத்தில் கென்யாவை எதிர்கொள்கிறது. 
    Next Story
    ×