search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்ட்னர்ஷிப் ஆட்டம் சரியாக அமையவில்லை: விராட்கோலி
    X

    பார்ட்னர்ஷிப் ஆட்டம் சரியாக அமையவில்லை: விராட்கோலி

    கேப் டவுன்-ல் நடந்த முதல் டெஸ்டில் பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை என தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #SAvIND #viratkohli
    தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘250 முதல் 275 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி இலக்காக நிர்ணயிக்கும் என்று நினைத்தோம். ஆனால் 210 ரன்களுக்குள் இலக்கை அவர்களை நிர்ணயிக்க வைத்தது அற்புதமான முயற்சியாகும். யாராவது ஒருவர் 75 முதல் 80 ரன்கள் எடுத்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். இந்த ஆடுகளத்தில் 25 அல்லது 30 ரன்கள் எடுப்பது போதுமானது கிடையாது. எல்லா பெருமையும் தென் ஆப்பிரிக்க அணியையே சாரும். ஒரு பவுலர் குறைவாக இருந்த போதிலும் (ஸ்டெயின் காயம்) முழு மூச்சுடன் துல்லியமாக பந்து வீசினார்கள். இந்த டெஸ்ட்டை பொறுத்த மட்டில் முதலாவது இன்னிங்சில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இருந்தால் தென்ஆப்பிரிக்காவை 220 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்கலாம். இந்த டெஸ்டில் செய்த தவறுகளை திருத்தி கொள்ள வேண்டியது அவசியமானது. இரு இன்னிங்சிலும் திடீரென விக்கெட்டுகளை மள, மள வென்று இழந்து நிலை குலைந்தது பின்னடவை ஏற்படுத்தியது. பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் எதுவும் அமையவில்லை. எப்படி நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். பவுலர்கள் நிலைமையை நன்கு புரிந்து செயல்பட்டனர். ஹர்திக் பாண்ட்யா இன்னிங்ஸ் மிகவும் அருமையானது’ என்று தெரிவித்தார்.

    வெற்றிக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் அளித்த பேட்டியில், ‘இந்த டெஸ்டில் கடினமான கட்டத்தில் எழுச்சி பெற முடிந்தது. அதற்கு ஏற்ப விளையாடியது அருமையான விஷயமாகும். 4-வது நாளில் மேலும் 200 ரன்களுக்கு மேல் எடுத்து 350 ரன்கள் வரை இலக்காக நிர்ணயிக்க திட்டமிட்டோம். ஆடுகளத்தில் வெடிப்பு ஏற்பட்டு பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இன்று காலையில் ஆடுகளத்தின் தன்மையை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. முதல் நாளை போல் ஆடுகளம் புற்களுடன் பச்சையாக இருந்தது. எதிரணியை தொடர்ச்சியாக நெருக்கடிக்கு ஆளாக்க வேண்டியது முக்கியமானதாகும். ஸ்டெயின் பயனுள்ள பந்து வீச்சாளர். அவர் ஆடமுடியாமல் போனது எங்களுக்கு இழப்பாகும்’ என்றார். 
    Next Story
    ×