search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி வில்லியர்சை முன்னதாகவே அவுட் செய்து இருக்க வேண்டும்: புவனேஷ்வர் குமார்
    X

    டி வில்லியர்சை முன்னதாகவே அவுட் செய்து இருக்க வேண்டும்: புவனேஷ்வர் குமார்

    தென்ஆப்பிரிக்கா 12 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்த நிலையில், டி வில்லியர்ஸை முன்னதாகவே அவுட் செய்திருக்க வேண்டும் என புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார். #SAvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 286 ரன் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. டி வில்லியர்ஸ் 65 ரன்னும், கேப்டன் டு பிளிசிஸ் 63 ரன்னும் எடுத்தனர். புவனேஷ்வர் குமார் 87 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கெட்டும், முகமது‌ ஷமி, பும்ரா, ஹர்த்திக்பாண்ட்யா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.



    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 27 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர்கள் முரளி விஜய் 1 ரன்னிலும், தவான் 16 ரன்னிலும், கேப்டன் கோலி 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன் எடுத்து பரிதாப நிலையில் இருந்தது. புஜாரா 5 ரன்னும், ரோகித்சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    4 விக்கெட் கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘‘இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்வது அவசியமானது. நீண்ட நேரம் களத்தில் நீடித்து நிற்பது மிகவும் முக்கியமானது.

    முதல் நாள் ஆட்டத்தில் டி வில்லியர்சை நாங்கள் முன்னதாக அவுட் செய்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். நாங்கள் கூடுதலாக 25 முதல் 30 ரன்கள் வரை கொடுத்து விட்டதாக நினைக்கிறோம். இதை தவிர்த்து இருக்க வேண்டும். எனது பந்துவீச்சு நேர்த்தியாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.



    தென்ஆப்பிரிக்கா பேட்டிங் பயிற்சியாளர் கூறும்போது, ‘‘இந்தியாவின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. டி வில்லியர்ஸ் ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிவிட்டார். எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதை விட பந்துவீச்சாளர்கள் அதைவிட அபாரமாக செயல்படுவார்கள்’’ என்றார். #SAvIND, BhuvneshwarKumar, #DeVilliers
    Next Story
    ×