search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் கடைசி டெஸ்டில் நம்பிக்கை அளித்த ரூட்: தடுமாற்றத்துடன் தொடங்கி நிமிர்ந்தது இங்கிலாந்து
    X

    ஆஷஸ் கடைசி டெஸ்டில் நம்பிக்கை அளித்த ரூட்: தடுமாற்றத்துடன் தொடங்கி நிமிர்ந்தது இங்கிலாந்து

    ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி துவக்க விக்கெட்டுகளை இழந்தபோதும், ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டத்தினால் சரிவில் இருந்து மீண்டது. #AUSvENG
    சிட்னி:

    ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 4 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் 3-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஸ்டோன்மேன் 24 ரன்னிலும், பின்சி 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    மற்றொரு தொடக்க விரர் அலிஸ்டயர் கூக் இன்னும் 47 ரன் எடுத்தால் 12 ஆயிரம் ரன் கடப்பார் என்ற நிலையில் விளையாடினார். ஆனால் அவர் 39 ரன்னில் ஆவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்னாக இருந்தது.

    அதன்பின்னர் ஜோ ரூட்டுடன், மலன் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடியதுடன் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். தேநீர் இடைவேளைக்குப் பிறகு ரூட் அரை சதம் கடந்தார். மலனும் அரை சதத்தை நெருங்கினார். இவர்கள் இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். அணியின் ஸ்கோரும் 200 ரன்னைத் தாண்டியது.
    Next Story
    ×