பெய்ஜிங்:
சீனாவின் சென்சென் நகரில் மகளிருக்கான டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 30-ம் தேதி தொடங்கிய இப்தொடரின் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, அமெரிக்காவின் அலிசான் ரிஸ்கியுடன் மோதினார்.
முதல் செட்டில் 3-6 என்ற கணக்கில் ஷரபோவா தோல்வியடைந்தார். இரண்டாவது செட்டில் ஷரபோவா 6-4 என வென்று சமநிலை ஏற்படுத்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த 3-வது செட்டை 6-4 என ஷரபோவா கைப்பற்றினார். இதன்மூலம் 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற ஷரபோவா காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் மூன்றாம் நிலை வீராங்கனையான சீனாவின் ஷுவாய் சாங், கஜகஸ்தானின் சரினா தியாசுடன் மோதினார். இப்போட்டியில் 6-3, 6-7, 6-4 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்த ஷுவாய் சாங் தொடரைவிட்டு வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜெலினா ஆஸ்டபென்கோ, செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவாவை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் கரோலினா பிலிஸ்கோவா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
#ShenzhenopenTennis #MariaSharapova #ShuaiZhang