search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித், பாண்ட்யா சகோதரர்களை தக்கவைக்க மும்பை அணி முடிவு
    X

    ரோகித், பாண்ட்யா சகோதரர்களை தக்கவைக்க மும்பை அணி முடிவு

    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா மற்றும் பாண்ட்யா சகோதரர்களை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. #IPL #IPLAuction
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா மற்றும் பாண்ட்யா சகோதரர்களை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

    11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை யொட்டி வீரர்களின் மெகா ஏலம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 3 வீரர்களை நேரடியாகவும், 2 வீரர்களை ஏலத்தின் போது ‘மேட்ச் கார்டு’ சலுகையை பயன்படுத்தியும் பெற முடியும். தங்கள் அணியில் நீடிக்கச் செய்யும் வீரர்களின் விவரங்களை 4-ந்தேதிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.



    நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்று கோப்பைகளை வென்றுத்தந்த கேப்டன் ரோகித் சர்மாவை தக்க வைக்கிறது. அதிரடி பேட்டிங் மூலம் மிரள வைக்கும் ஹர்திக் பாண்ட்யா, அவரது சகோதரர் குணால் பாண்ட்யா ஆகியோரையும் தக்கவைத்துக் கொள்ள அந்த அணி நிர்வாகம் விரும்புவதாக கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார். ஒரு அணியில் தக்கவைக்கப்படும் 3-வது வீரருக்கு ரூ.7 கோடி ஊதியமாக வழங்க வேண்டும். ஆனால் குணால் பாண்ட்யா சர்வதேச போட்டியில் ஆடாதவர் என்பதால் அவர் இந்த வகையில் அணியில் தொடரும் பட்சத்தில் ரூ.3 கோடி மட்டுமே பெறுவார்.

    ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை ‘மேட்ச் கார்டு’ மூலம் இழுக்கவும் மும்பை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    டெல்லி அணி எத்தனை வீரர்களை வைத்துக்கொள்வது என்பதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. என்றாலும் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இளம் வீரர்கள் அந்த அணியில் நிச்சயம் தொடருவார்கள்.

    ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சூதாட்ட பிரச்சினையால் 2 ஆண்டு காலம் தடையை அனுபவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் களம் இறங்குகிறது. டோனி, சுரேஷ் ரெய்னா, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது. உடல்தகுதியுடன் இருந்தால் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ ‘மேட்ச் கார்டு’ மூலம் சென்னை அணிக்கு அழைக்கப்படுவார்.

    ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி டேவிட் வார்னர், தீபக் ஹூடா ஆகியோரை தக்கவைக்கும் என்று தெரிகிறது.
    Next Story
    ×