search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘பாக்சிங் டே’ டெஸ்ட்: குக் சதத்தால் இங்கிலாந்து இரண்டாம் நாளில் 192/2
    X

    ‘பாக்சிங் டே’ டெஸ்ட்: குக் சதத்தால் இங்கிலாந்து இரண்டாம் நாளில் 192/2

    மெல்போர்னில் நடைபெற்று வரும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் குக் சதத்தால் இங்கிலாந்து இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்துள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 3-0 என வென்றதுடன் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் 4-வது டெஸ்ட் நேற்று பாரம்பரியமான மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. ‘பாக்சிங் டே’ டெஸ்டில் 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணி வீரர்கள் களம் இறங்கினார்கள்.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் பான்கிராஃப்ட், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 64 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். பான்கிராஃப்ட் 26 ரன்கள் எடுத்த நிலையில் வோக்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். சதம் அடித்த 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.



    முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 65 ரன்னுடனும், ஷான் மார்ஷ் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. ஸ்மித 76 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ஷான் மார்ஷ் 61 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலேயா அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணி பந்துவீச்சில் பிராட் 4 விக்கெட்களும், ஜிம்மி ஆண்டர்சன் 3 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்களும், டாம் குர்ரன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், மார்க் ஸ்டோன்மேன் இருவரும் களமிறங்கினர். ஸ்டோன்மேன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் 17 ரன்களில் ஹசில்வுட் பந்தில் எல்.பி.டபுல்யூ ஆனார். 



    அதன்பின் குக்-உடன், ஜோ ரூட் இணைந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய குக் சதம் அடித்தார். இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. குக் 104 ரன்களுடனும், ஜோ ரூட் 49 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் ஸ்டோன்மேன், ஹசில்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    Next Story
    ×