search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி இன்று தென்ஆப்பிரிக்கா பயணம்: கோலி மனைவியுடன் செல்கிறார்
    X

    இந்திய அணி இன்று தென்ஆப்பிரிக்கா பயணம்: கோலி மனைவியுடன் செல்கிறார்

    தென்ஆப்பிரிக்கா அணியுடன் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் தொடரில் விளையாட விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இன்று தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விளையாடி வெற்றி பெற்றது. மூன்று தொடர்களையும் கைப்பற்றி முத்திரை பதித்தது.

    இந்திய அணி அடுத்து தென்ஆப்பிரிக்காவில் விளையாடுகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இன்று நள்ளிரவு தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறது.

    மும்பையில் இருந்து துபாய் சென்று அங்கிருந்து தென்ஆப்பிரிக்கா செல்கிறது. கேப்டன் கோலி இலங்கைக்கு எதிரான டெஸ்டில் மட்டும் ஆடினார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடவில்லை. நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ததால் இந்த தொடரில் ஓய்வு கேட்டு இருந்தார். தற்போது அவர் அணியோடு இணைந்து கொள்கிறார்.

    விராட்கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் தென்ஆப்பிரிக்கா செல்கிறார். இருவரும் அங்கு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். புத்தாண்டை கொண்டாடியவுடன் அனுஷ்கா நாடு திரும்பி விடுவார்.

    இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. ஜனவரி 28-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.

    பிப்ரவரி 1-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஒருநாள் போட்டிகள் நடக்கிறது. இதில் ஒரு போட்டியை தவிர மற்ற 5 ஆட்டங்களும் பகல்-இரவாக நடக்கிறது.

    அதை தொடர்ந்து பிப்ரவரி 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்திய அணிக்கு தென்ஆப்பிரிக்காவுடனான போட்டி கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    இந்திய அணி கடைசியாக 2014-15-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடரை இழந்தது. அதன்பிறகு விளையாடிய 10 டெஸ்ட் தொடரில் தொடரை இழந்தது இல்லை. 9 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஒரு தொடர் சமநிலையானது. இதில் பெரும்பாலும் சொந்த மண்ணில் தான் விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மண்ணில் தலா ஒரு தொடரை கைப்பற்றியது.

    ஆனால் இதை தென்ஆப்பிரிக்காவில் தக்க வைப்பது என்பது மிகவும் கடினமே. அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் காத்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது.

    கடைசியாக 2013-ம் ஆண்டு அங்கு 2 டெஸ்டில் விளையாடி 0-1 என்ற கணக்கில் தோற்றது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் விவரம்:-

    வீராட்கோலி (கேப்டன்), ரகானே (துணைகேப்டன்), தவான், முரளிவிஜய், புஜாரா, ரோகித்சர்மா, ஹர்த்திக் பாண்ட்யா, விர்த்திமான்சகா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த்சர்மா, முகமது‌ஷமி, புவனேஷ்வர்குமார், லோகேஷ் ராகுல், பும்ரா, பார்த்தீவ் பட்டேல்.
    Next Story
    ×