search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை டி20 போட்டியில் அஸ்வின் சாதனைகளை சாஹல் முறியடிப்பாரா?
    X

    மும்பை டி20 போட்டியில் அஸ்வின் சாதனைகளை சாஹல் முறியடிப்பாரா?

    இலங்கைக்கு எதிராக மும்பையில் இன்று நடக்க இருக்கும் கடைசி டி20 போட்டியில் அஸ்வின் சாதனைகளை சாஹல் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்குப் பதிலாக குல்தீப் யாதவ், சாஹல் களம் இறங்கி விளையாடி வருகிறார்கள்.

    இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சாஹல் பந்து வீச்சில் கலக்குகிறார். இவர் இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் மட்டும் இதுவரை 11 போட்டியில் 23 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 10 ஆட்டத்தில் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்திலும், கேஸ்ரிக் வில்லியம்ஸ் 9 போட்டியில் 14 விக்கெட்டுக்களும், ஷதாப் கான் 10 போட்டியிலும் 14 விக்கெட்டுக்களும், இம்ரான் தாஹிர் 9 போட்டியில் 14 விக்கெட்டுக்களும் வீழ்த்தி முறையே 3-வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.



    கடந்த ஆண்டு அஸ்வின் 23 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். தற்போது சாஹல் 23 விக்கெட்டுக்களுடன் சாதனையை சமன் செய்துள்ளார். இன்றைய போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினால் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய அஸ்வினை சாதனையை முறியடிப்பார். 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் ஒரே தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெறுவார். இதற்கு முன் அஸ்வின் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் ஒரு வருடத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய அஜ்மல் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. அஜ்மல் 2012-ல் 25 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×