search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் அருகே கார் விபத்து: ஆஸி., இங்கிலாந்து வீரர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை
    X

    மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் அருகே கார் விபத்து: ஆஸி., இங்கிலாந்து வீரர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை

    ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் அருகே கார் விபத்து ஏற்பட்டது. இதனால் வீரர்களுக்கு ஆபத்தில்லை என கூறப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியதுடன், தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாரம்பரியமான மெல்போர்ன் மைதானத்தில் ‘பாக்சிங் டே’ டெஸ்டாக வருகிற 26-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.



    உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4.45 மணியளவில் மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரபரப்பாக இயங்கும் பிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட்டில் கார் ஒன்று பொதுமக்கள் மீது பலமாக மோதியுள்ளது. இதில் சுமார் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளது. பலர் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. ஒருவேளை இது நாசவேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

    கடந்த வருடம் பாக்சிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டிக்கு முன் விக்டோரியாவில் போலீசார் சில மர்ம நபர்களை கைது செய்தனர். அப்போது கிறிஸ்துஸ் பண்டிகையையொட்டு பிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட்டில் தாக்குதல் நடத்த இருந்ததாக தெரிய வந்தது. இதனால் மெல்போர்னில் நடைபெற்ற போட்டிக்கு பல அடுக்கு சோதனைக்குப்பின் ரசிகர்கள் போட்டியை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.



    தற்போது நடைபெற்றது அதுபோன்ற செயலாக இருக்குமோ? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதுகுறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
    Next Story
    ×