search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்பந்து 2018-ல் எனக்கு மிகப்பெரிய ஊதியத்தை அளிக்கும்: மெஸ்சி நம்பிக்கை
    X

    கால்பந்து 2018-ல் எனக்கு மிகப்பெரிய ஊதியத்தை அளிக்கும்: மெஸ்சி நம்பிக்கை

    ரஷியாவில் அடுத்த வருடம் நடக்கும் 2018 உலகக் கோப்பையை கைப்பற்ற அர்ஜென்டினாவிற்கு வாய்ப்பு உள்ளதாக நட்சத்திர வீரர் மெஸ்சி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி விளங்கி வருகிறார். பார்சிலோனா அணிக்காக விளையாடும் அவர், பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். ஆனால், அர்ஜென்டினா அணிக்காக மிகப்பெரிய சாம்பியன் பட்டத்தை வாங்கி கொடுத்தது கிடையாது.

    2005-ம் ஆண்டு தனது 18 வயதில் தேசிய அணியில் காலெடுத்து வைத்த மெஸ்சி, 2006, 2010, 2014 ஆகிய மூன்று உலகக்கோப்பையில் விளையாடியுள்ளார். இவரது தலைமையிலான அர்ஜென்டினா 2014-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.



    இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. கடைசி நேரத்தில் 0-1 என அர்ஜென்டினா வெற்றி வாய்ப்பை இழந்தது. அதன்பின் இரண்டு முறை அமெரிக்க கண்டத்தில் நாடுகளுக்கு இடையில் நடைபெறும் கோபா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டியில் சிலியிடம் தோல்வியடைந்தது.

    இதனால் மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து மெஸ்சி ஓய்வு பெற்றார். பின்னர் அவரது ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார்.

    அடுத்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எப்படியாவது சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என அர்ஜென்டினா அணி நினைக்கிறது.

    இந்நிலையில் அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி, 2018-ல் கால்பந்து தனக்கு மிகப்பெரிய ஊதியத்தை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘ரஷிய உலகக்கோப்பைக்கு மற்ற அணிகள் எந்த மனநிலையில் வருகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் செல்கிறோம். எப்பொழுதும் இந்த எண்ணத்துடன்தான் செல்வோம்.



    உலகக்கோப்பை எப்போதும் மகிழ்ச்சியான நினைவுகள். சில கசப்பான நிகழ்வுகளும் இருக்கும். இதுவெல்லாம், தொடர் எப்படி முடிகிறது. நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தது’’ என்றார்.

    அர்ஜென்டினா அணி பயிற்சியாளர் ஜார்ஜ் சம்பவுலி, ‘‘கால்பந்தில் மெஸ்சிக்காக உலகக்கோப்பை பாக்கியுள்ளது’’ என்ற கூறியிருந்தார்.

    இதுகுறித்து கேட்டதற்கு ‘‘ஆமாம், அவர் கூறியதை நானும் கேட்டேன். என்னிடமும் இதை சொல்லியிருக்கிறார். கால்பந்து எனக்கு உலகக்கோப்பையை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×