search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாக்கி உலக லீக் பைனல் நாளை ஆரம்பம்: ஆசியக் கோப்பை வென்ற உற்சாகத்துடன் களமிறங்கும் இந்திய அணி
    X

    ஹாக்கி உலக லீக் பைனல் நாளை ஆரம்பம்: ஆசியக் கோப்பை வென்ற உற்சாகத்துடன் களமிறங்கும் இந்திய அணி

    ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணி, ஒடிசா மாநிலத்தில் நாளை தொடங்க உள்ள ஹாக்கி உலக லீக் பைனல் தொடரிலும் முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் ஹாக்கி உலக லீக் பைனல் தொடர் நாளை (டிசம்பர் 1) தொடங்கி டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஏ பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன்களான அர்ஜென்டினா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

    மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில், உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை நாளை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ளனர்.

    தொடர்ந்து சில போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி, சமீபத்தில் டாக்காவில் நடந்த ஆசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதே உற்சாகத்துடன் உலக போட்டியில் முத்திரை பதிக்க முனைப்புடன் களமிறங்க உள்ளது. குறிப்பாக இந்த போட்டியானது, இந்திய ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளருக்கான முதல் பலப்பரீட்சையாக இருக்கும்.

    மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர்களுடன் அனுபவம் வாய்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்மன்பிரீத் சிங், சுமித், திப்சன் திர்கே, குர்ஜந்த் சிங், வருண் குமார் போன்ற இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ரூபிந்தர் பால் சிங், பீரேந்திர லக்ரா ஆகிய அனுபவ வீரர்களும் உள்ளனர். 2017 ஹாக்கி இந்தியா லீக் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமித் ரோகிதாசும் அணியில் உள்ளார்.

    இதேபோல் ஆஸ்திரேலிய அணியும் புதிய பயிற்சியாளரின் கீழ் இந்த தொடரை சந்திக்க உள்ளது. ஆக்ரோஷமாக விளையாடும் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்கும்.
    Next Story
    ×