search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2018 உலகக்கோப்பை பெண்கள் ஹாக்கி: இந்தியா முதல் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது
    X

    2018 உலகக்கோப்பை பெண்கள் ஹாக்கி: இந்தியா முதல் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது

    லண்டனில் அடுத்த வருடம் உலகக்கோப்பை பெண்கள் ஹாக்கி தொடர் நடக்கிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை சந்திக்கிறது.
    லண்டனில் அடுத்த வருடம் பெண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்தியாவும் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.

    உலகக்கோப்பை தொடரில் ஒவ்வொரு அணியும் எந்த பிரிவில் இடம்பிடித்துள்ளன என்ற விவரம் இன்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பிடித்துள்ளன.



    உலகக்கோப்பை தொடர் தொடங்கும் ஜூலை 21-ந்தேதி இந்தியா தனது முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. ஜூலை 26-ந்தேதி அயர்லாந்தையும், ஜூலை 29-ந்தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.
    Next Story
    ×