search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து
    X

    சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து

    சீன ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். சாய்னா, பிரனாய் தோல்வியடைந்து வெளியேற்றம் ஏமாற்றம் அடைந்தனர்.
    சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நேற்று தொடங்கியது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து சீனாவின் இளம் வீராங்கனை ஹான் யூயியை எதிர்கொண்டார்.

    17 வயதே அணி ஹான் யூயி முதல் செட்டில் 5-6 என பிவி சிந்துவிற்கு சற்று நெருக்கடி கொடுத்தார். அதன்பின் பிவி சிந்து தனது அனுபவ விளையாட்டின் மூலம் 21-15 என முதல் செட்டை கைப்பற்றினார்.



    2-வது செட்டையும் 21-13 என எளிதில் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். 6-0 என முன்னிலைப் பெற்ற சிந்து பின்னர் முதல் பாதி ஆட்டத்தில் 11-3 என முன்னேறினார். பின்னர் ஹன் யூயி 9-12 என கடகட என முன்னேறினார். பின்னர் சிந்து வெற்றி பெற்றார்.

    இந்தியாவின் சாய்னா, பிரனாய் ஆகியோர் தோல்வியடைந்த தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் பிவி சிந்து மட்டும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    Next Story
    ×