search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் தரவரிசை: மீண்டும் டி வில்லியர்ஸ் முதலிடம்; பந்து வீச்சில் ஹசன் அலி அசத்தல்
    X

    ஒருநாள் தரவரிசை: மீண்டும் டி வில்லியர்ஸ் முதலிடம்; பந்து வீச்சில் ஹசன் அலி அசத்தல்

    ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி டி வில்லியர்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் 176 ரன்கள் குவித்தார்.

    இதன்மூலம் ஐ.சி.சி. ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார். முதல் இடத்தில் இருந்து விராட் கோலி 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். 2-வது போட்டிக்கு முன் டி வில்லியர்ஸ் 3-வது இடத்தில் இருந்தார். தற்போது 879 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 877 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 865 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் ஆசம் 833 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். குயின்டான் டி காக், ஜோ ரூட் ஆகியோர் 5-வது இடத்தையும், ரோகித் சர்மா 7-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.



    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி முதல் இடத்தை பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் 6 இடங்கள் முன்னேறி 743 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    இம்ரான் தாஹிர், ஹசில்வுட், ரபாடா, மிட்செல் ஸ்டார்க், பும்பரா, ட்ரென்ட் போல்ட், அக்சார் பட்டேல், ரஷித் கான், சுனில் நரைன் ஆகியோரை முறையே 2-வது இடம் முதல் 10-வது இடத்தை பிடித்துள்ளார்.



    ஆல்ரவுண்டர் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் ஹபீஸ் 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். சாஹிப் அல் ஹசன் 345 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் நபி 3-வது இடத்தையும், இலங்கை வீரர் மேத்யூஸ் 4-வது இடத்தையும், பென் ஸ்டோக்ஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
    Next Story
    ×