search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுகாத்தி டி20: ஆஸ்திரேலியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு - இந்திய அணியில் மாற்றம் இல்லை
    X

    கவுகாத்தி டி20: ஆஸ்திரேலியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு - இந்திய அணியில் மாற்றம் இல்லை

    கவுகாத்தியில் நடைபெற இருக்கும் 2-வது போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் வார்னர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. விராட் கோலி டாஸ் சுண்ட, வார்னர் ‘டெய்ல்’ என கேட்டார். வார்னர் கேட்டபடி டெய்ல் விழ, வார்னர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் டேன் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு மார்கஸ் ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    டாஸ் வென்ற வார்னர் ‘‘ஆடுகளம் சிறப்பாக உள்ளது. ஆனால், திறமையை நல்ல முறையில் வெளிப்படுத்த வேண்டும். கவுகாத்தியில் முதன்முறையாக விளையாடுகிறோம். ரசிகர்களுக்கு சிறந்த வகையில் விருந்து படைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.



    டாஸ் இழந்த விராட் கோலி ‘‘நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய உள்ளோம். அதிக அளவில் ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு முறையில் மைதானத்திற்குள் இறங்கும்போதும் திரும்ப திரும்ப சிறந்த விஷயம் தேவை. இதை கொண்டு வருவதற்கு மிகவும் கடினம். ஆனால், இழப்பிற்கு மிகவும் சுலபம். மைதானம் மிகவும் அழகாக உள்ளது. நாங்கள் இங்கே வரும்போது உற்சாக மிகுதியால் ரசிகர்கள் எங்களை சூழ்ந்து கொண்டு கொண்டார்கள். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை’’ என்றார்.
    Next Story
    ×