search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாய்ப்புகள் என் வீட்டுக் கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை
    X

    வாய்ப்புகள் என் வீட்டுக் கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை

    நான் பெரிய அளவில் தவறுகள் செய்யவில்லை. வாய்ப்புகள் என்னைத் தேடிவரும் என அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்டு வரும் அஸ்வின், சமீப காலமாக ஒருநாள் போட்டியில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. 111 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 150 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    இலங்கைக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து பிசிசிஐ கூறுகையில், ‘‘இருவரும் ஏராளமான போட்டிகளில் விளையாடி வருவதால் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தது. இதற்கிடையில் அஸ்வின் இங்கிலாந்து கவுண்டி போட்டியில் விளையாடினார்.

    இதனால் கிரிக்கெட் விமர்சகர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடிப்பது மிகவும் கடினம் என்று தெரிவித்தனர். இதற்கு ஏற்ற வகையில் இலங்கை தொடரில் சாஹல், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.

    இதனைத் தொடர்ந்து பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சந்தேகம் வலுத்தள்ளது.

    இந்நிலையில் மீண்டும் வாய்ப்பு கதவை தட்டும் என அஸ்வின் நம்பிக்கையுடன் உள்ளார். இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘ஒருநாள் வாய்ப்பு என்னுடைய வீட்டின் கதவை தட்டும் என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால், நான் அதிக அளவில் தவறுதலாக செயல்படவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது. அதை சரியான பயன்படுத்திக் கொள்வேன்’’ என்றார்.

    மேலும், தற்போதைய சூழ்நிலையில் குல்தீப் யாதவ், சாஹல் ஆகிய விரிஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கு விராட் கோலி அதிக அளவில் முக்கியத்தும் கொடுக்கிறார். அதனால்தான் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.



    இதற்கு அஸ்வின் ‘‘தற்போது நான் முடிவை எடுப்பவராக இருந்திருந்தால் உங்களுடைய கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியும். நான் முடிவு எடுக்கும் இடத்தில் இல்லை.

    நான் ரசிகர்களின் கூட்டத்திற்காக விளையாடவில்லை. நான் ஐந்தாவது டிவிஷனில் விளையாடினாலும் கூட மிகவும் சந்தோசமாக என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அதை மிகவும் அதிக அளவில் நேசிப்பேன். சூழ்நிலை ஒரு பிரச்சினையே அல்ல. என்னுடைய ஆட்டத்தை நான் உயர்த்துவேன். ஆனால், என்னுடைய ஆட்டத்தை நேசிக்கிறேன். ஆகவே, நான் எதையுமே இழந்து கொண்டிருக்கவில்லை’’ என்றார்.
    Next Story
    ×