search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் கிரிக்கெட்: ஷஷாங்க் மனோகர் வரவேற்பு
    X

    பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் கிரிக்கெட்: ஷஷாங்க் மனோகர் வரவேற்பு

    பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு ஐ.சி.சி. தலைவர் ஷஷாங்க் மனோகர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
    இலங்கை அணி கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடும்போது வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தார்கள். இதனால் இலங்கை அணி பாதியிலேயே தொடரை முடித்துக் கொண்டு சொந்த நாடு திரும்பியது.

    அதன்பின் எந்த அணியும் பாகிஸ்தான் சென்ற விளையாடவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கடும் முயற்சி காரணமாக ஜிம்பாப்வே அணி மட்டும் பாகிஸ்தான் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது.

    ஐ.சி.சி. பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, ஐ.சி.சி. உலக லெவன் அணியை பாகிஸ்தான் அனுப்ப சம்மதம் தெரிவித்தது.

    பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. 2-வது போட்டி நாளையும், 3-வது மற்றும் கடைசி போட்டி 15-ந்தேதியும் நடக்கிறது.



    இந்த தொடர் நடைபெற்ற பின் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை - பாகிஸ்தான் இடையிலான தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடக்கிறது. இதில் ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி லாகூரில் நடக்கிறது.

    இதன்மூலம் தொடர்ந்து பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச போட்டிகள் மீண்டும் நடைபெறும நிலை உள்ளது. பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்குவதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய ஐ.சி.சி. தலைவரும் ஆன ஷஷாங்க் மனோகர் வரவேற்றுள்ளார்.
    Next Story
    ×