search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி20 சேஸிங்கில் அதிக ரன்கள்: மெக்கல்லம் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
    X

    டி20 சேஸிங்கில் அதிக ரன்கள்: மெக்கல்லம் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

    இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள் அடித்ததன் மூலம் சேஸிங்கில் அதிகம் ரன்கள் அடித்திருந்த மெக்கல்லம் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி.
    இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி 2-வது இன்னிங்சில் (சேஸிங்) பேட்டிங் செய்வதில் வல்லவர். முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்ததை விட 2-வது இன்னிங்சில்தான் அதிக ரன்கள் குவித்துள்ளார்.

    நேற்று பிரேமதாசா மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 170 ரன்கள் சேர்த்தது. பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. 3-வது நபராக களம் இறங்கிய விராட் கோலி சிறப்பாக விளையாடி 82 ரன்கள் குவித்தது இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.



    82 ரன்கள் மூலம் விராட் கோலி சேஸிங்கில் இதுவரை 1016 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் சேஸிங் அதிக ரன்கள் அடித்திருந்த மெக்கல்லம் சாதனையை முறியடித்துள்ளார். மெக்கல்லம் 38 இன்னிங்சில் 1006 ரன்கள் எடுத்துள்ளார். சாராசரி 33.53 ஆகும். 8 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார்.

    விராட் கோலி 21 இன்னிங்சில் 1016 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 84.66 ஆகும். 9 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார். வார்னர் 35 இன்னிங்சில் 892 ரன்களும், மார்ட்டின் குப்தில் 31 இன்னிங்சில் 882 ரன்களும், மொகமது ஷேசாத் 27 இன்னிங்சில் 819 ரன்களும் அடித்துள்ளனர்.
    Next Story
    ×