search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மான்செஸ்டர் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 226 ரன்னில சுருண்டது
    X

    மான்செஸ்டர் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 226 ரன்னில சுருண்டது

    மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 226 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி பேர்ஸ்டோவ் (99), பென் ஸ்டோக்ஸ் (58), ஜோ ரூட் (52) மற்றும் அலஸ்டைர் குக் (46) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 362 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டும் மோர்கல், ஆலிவியர், மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக எல்கர், குன் ஆகியோர் களம் இறங்கினார்கள். எல்கர் ரன்ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார்.

    அடுத்து குல் உடன் ஹசிம் அம்லா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்தது. அணியின் ஸ்கோர் 47 ரன்னாக இருக்கும்போது அம்லா 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். குன் 24 ரன்னில்  வெளியேறினார்.

    அதன்பின் வந்த பவுமா தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்தார். டு பிளிசிஸ் (27), டி கா் (24), டி ப்ருயின் (11), மகாராஜ் (13), ரபாடா (23) என அவுட்டாக தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்திருந்தது. மோர்கல் 18 ரன்னுடனும், ஆலிவியர் 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மோர்கல், ஆலிவியர் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆலிவர் 4 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 226 ரன்னில் சுருண்டது. மோர்கல் 20 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஆண்டர்சன் 4 விக்கெட்டும், பிராட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். தென்ஆப்பிரிக்கா அணி 226 ரன்னில் சுருண்டதால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 136 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    136 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
    Next Story
    ×