search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது டெஸ்ட்: பேர்ஸ்டோவ் ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 362 ரன்கள் சேர்ப்பு
    X

    4-வது டெஸ்ட்: பேர்ஸ்டோவ் ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 362 ரன்கள் சேர்ப்பு

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்று வரும் 4-வது மற்றும் கடைசி டெஸ்டில் பேர்ஸ்டோவின் அதிரடியால் இங்கிலாந்து 362 ரன்கள் சேர்த்துள்ளது.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. பேர்ஸ்டோவ் 33 ரன்னுடனும், ரோலண்ட்-ஜோன்ஸ் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 46 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 52 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 58 ரன்களும் எடுத்திருந்தனர்.



    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோலண்ட்-ஜோன்ஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 14 ரன்னிலும், பிராட் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஆனால் மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடினார்.


    1 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்த பேர்ஸ்டோவ்

    ஆனால் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி விக்கெட்டாக துரதிருஷ்டவசமாக ஆட்டம் இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவரது ஆட்டத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 362 ரன்கள் சேர்த்துள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், மோர்கல், ஆலிவியர், மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    Next Story
    ×