search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல்.: காரைக்குடி காளை - மதுரை அணிகள் இன்று மோதல்
    X

    டி.என்.பி.எல்.: காரைக்குடி காளை - மதுரை அணிகள் இன்று மோதல்

    தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்‘ 20 ஓவர் போட்டியில், காரைக்குடி காளை - மதுரை சூப்பர் ஜெய்ன்ட் அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
    நெல்லை:

    2-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்‘ 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 இடங்களிலும் நடைபெற்று வருகிறது.

    நேற்றுடன் 5 ஆட்டங்கள் முடிந்து விட்டன. அதன்படி நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் தொடக்க ஆட்டங்களில் வென்றன. திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் ஆட்டத்தில் தோற்று 2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. காரைக்குடி காளை, திருவள்ளூர் வீரன்ஸ், மதுரை சூப்பர் ஜெய்ன்ட், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 4 அணிகளும் தொடக்க ஆட்டங்களில் தோற்றன.

    இந்தப் போட்டித் தொடரில் 6-வது லீக் ஆட்டம் நெல்லை ஐ.சி.எல். மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் காரைக்குடி காளை - மதுரை சூப்பர் ஜெய்ன்ட் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. காரைக்குடி காளை தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சிடம் தோற்றது. மதுரை அணி முதல் ஆட்டத்தில் திண்டுக்கல்லிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    மதுரை அணி கடந்த சீசனில் அனைத்து ஆட்டத்திலும் தோற்றது. இதனால் அந்த அணி வீரர்கள் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க மிகவும் கடுமையாக போராடுவார்கள்.
    Next Story
    ×