search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவி சாஸ்திரியின் சம்பளத்தை நிர்ணயிக்க நான்கு பேர் கொண்ட குழு
    X

    ரவி சாஸ்திரியின் சம்பளத்தை நிர்ணயிக்க நான்கு பேர் கொண்ட குழு

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரியின் சம்பளத்தை நிர்ணயிக்க நான்கு பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டது.

    இவரது பதவிக்காலம் வரும் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை வரை இருக்கிறது. தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டாலும், சம்பளம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    இதனால் சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை நிர்வாகக் குழு அமைத்துள்ளது. இந்தக்குழு ரவி சாஸ்திரியின் சம்பளத்தை நிர்ணயம் செய்யும்.


    நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய்

    இந்தக் குழுவில் பிசிசிஐ பொறுப்பு தலைவர் சி.கே. கன்னா, சிஇஓ ராகுல் ஜோரி, நிர்வாகக் குழுவில் இடம்பிடித்துள்ள டயானா எடுல்ஜி மற்றும் பிசிசிஐ பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குனராக செயல்படும்போது வருடத்திற்கு 6 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் பயிற்சியாளர் பதவிக்காலத்தில் 6 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
    Next Story
    ×