search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய பயிற்சியாளர் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை: பிசிசிஐ அறிவிப்பு
    X

    புதிய பயிற்சியாளர் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை: பிசிசிஐ அறிவிப்பு

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. கிரிக்கெட் ஆலோசனைக் குழு (கங்குலி, லட்சுமண், தெண்டுல்கர்) ரவி சாஸ்திரி, சேவாக், ராஜ்புட், டாம் மூடி உள்பட ஐந்து பேரிடம் நேர்காணல் நடத்தியது. அதன்பிறகு தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவரான கங்குலி, இன்னும் கால அவகாசம் வேண்டும், கேப்டனான விராட் கோலியுடன் ஆலோசிக்க வேண்டும். ஆகையால் தலைமை பயிற்சியாளர் யார் என்பதை இன்று அறிவிக்க இயலாது என்று கூறினார்.

    இதற்கிடையே வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு இன்று மாலைக்குள் தலைமை பயிற்சியாளர் யார்? என்பதை அறிவிக்க வேண்டும் பிசிசிஐ கேட்டுக்கொண்டது.



    அப்போதுதான் இன்று மாலை சுமார் நான்கரை மணியளவில் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. அனைத்து பத்திரிகைகளும் இதை பெரிய செய்தியாக வெளியிட்டு வந்தன.

    இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பெயரை அறிவிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து கங்குலி தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்குழு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×