search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்குப்பின் பாகிஸ்தானை கண்டு இந்தியா பயப்படுகிறது: ஷகாரியார் கான்
    X

    சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்குப்பின் பாகிஸ்தானை கண்டு இந்தியா பயப்படுகிறது: ஷகாரியார் கான்

    சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பின், எங்களுடன் விளையாடப் பயப்படுகிறது என ஷகாரியார் கான் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேரடி கிரிக்கெட் தொடர் நடைபெற இருநாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. எல்லையில் நடைபெறும் பதற்றத்தால் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் பாகிஸ்தானுடன் நேரடி போட்டி கிடையாது என்னு பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் எப்படியாவது தொடரை நடத்திவிட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளார்.



    பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவருக்கு தோல்வியே கிடைத்துள்ளது. தற்போது இந்தியாவை வம்புக்கு இழுக்கும் விதமாக, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்குப்பின், பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாட பயப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.



    மேலும், ஷகாரியார் கான் இதுகுறித்து கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் வெற்றி பெற்ற பின், இந்தியா இருநாட்டு தொடரில் எங்களுடன் விளையாட வேண்டும் என்ற சவால் விடுகிறோம். அவர்கள் எங்களுடன் விளையாடவில்லை. எங்களுடைய அணியை பார்த்து பயப்படுகிறார்கள். ஐசிசி போட்டியில் மட்டும் விளையாடுவோம். மற்ற போட்டிகளில் விளையாடமாட்டோன் என்று கூறிகிறார்கள்’’  என்றார்.
    Next Story
    ×