search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி மிகச்சிறந்த புத்திசாலி; ஸ்மித் அவரை விட மேல்- புனே அணி உரிமையாளர் பாராட்டு
    X

    டோனி மிகச்சிறந்த புத்திசாலி; ஸ்மித் அவரை விட மேல்- புனே அணி உரிமையாளர் பாராட்டு

    டோனி மிகச்சிறந்த புத்திசாலிகளில் ஒருவர் என்றும், அவரை விட ஸ்மித் கூடுதல் புத்திசாலி என்றும் புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கே பாராட்டியுள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் (2016 மற்றும் 2017) தடைவிதிக்கப்பட்டதால் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகள் இரண்டு வருடத்திற்கு புதிதாக சேர்க்கப்பட்டன.

    கடந்த வரும் டோனி தலைமையிலான புனே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது. இந்த வருடம் டோனியை நீக்கிவிட்டு ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித்தை புனே அணி கேப்டனாக்கியது.

    முதலில் மந்தமாக விளையாடிய அந்த அணி பின்னர் சிறப்பாக விளையாடி 9 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்தது. குவாலிபையர் 1-ல் வெற்றி பெற்று முதல் அணியாக புனே இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. நாளை மும்பையை எதிர்கொள்கிறது.

    புனே அணி வெற்றிபெறும் போதெல்லாம் அந்த அணியின் உரிமையாளரின் சகோதரர் டோனி குறித்து விமர்சனம் செய்து வந்தார்.

    இந்நிலையில் டோனி மிகச்சிறந்த புத்திசாலி என்றும், ஸ்மித் அவரை விட கூடுதல் புத்திசாலி என்றும் புனே அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘டோனியுடன் பேசிய வகையில், அவர் ஒரு தலைசிறந்த புத்திசாலிகளில் ஒருவர். உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர். ஆனால் டோனியை விட ஸ்மித் கூடுதல் புத்திசாலி. நான் ஸ்மித்திடம் சுருக்கமாக, சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று கூறினேன். அவருடைய திட்டம், யுக்திகள், மன உறுதி, முக்கியமான கட்டத்தில் அவர் எடுக்கும் முடிவுகள், அணியை ஒருங்கிணைத்து கொண்டு செல்லுதல் போன்றவற்றில் அவரின் செயல்பாடுகளை நம்புவதற்கு மிகவும் கடினமாக இருந்தது.



    பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் 8 முதல் 9 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். நான் தாஹிர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்மித்திடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நாம் 7 போட்டிகளில் வெற்றிபெறுவோம் என்றார். சிறப்பு வாய்ந்த டோனி அணிக்கு ஏதாவது செய்வார்.

    தற்போது நாம் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். அதற்கு வீரர்கள் ஐந்து முதல் 6 பந்துக்குள் மைதானத்தில் திறமையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் உனத்கட் ஆகியோர் மட்டுமே முக்கிய காரணிகள் அல்ல. வாஷிங்டன் சுந்தர் மற்றும் திரிபாதி ஆகியோர் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக திகழ்வார்கள்.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×