search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஞ்சி டெஸ்டில் 69 வருட சாதனையை முறியடித்த புஜாரா - சகா ஜோடி
    X

    ராஞ்சி டெஸ்டில் 69 வருட சாதனையை முறியடித்த புஜாரா - சகா ஜோடி

    ராஞ்சி டெஸ்டில் 7-வது விக்கெட்டுக்கு புஜாரா - சகா ஜோடி 199 ரன்கள் எடுத்ததன் மூலம் 69 வருட சாதனையை முறியடித்துள்ளனர்.
    ராஞ்சியில் நடைபெற்று வரும் 3-வது கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதற்கு புஜாரா, சகாவின் ஆட்டம்தான் முக்கிய காரணம்.

    7-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 199 ரன்கள் குவித்தது. புஜரா 202 ரன்களும், சகா 117 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 133 ரன்களை தொடும்போது 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை பெற்றது.



    இதற்கு முன் 1948-ம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் ஹெமு அடிகாரி - விஜய் ஹசாரே ஜோடி 132 ரன்கள் எடுத்திருந்தது. இதுதான் 7-வது விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது 69 ஆண்டுகளுக்குப் பிறகு புஜாரா - சகா ஜோடி அந்த சாதனையை முறியடித்துள்ளது.
    Next Story
    ×