search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் வரலாறு படைத்தது வெயில்: 118.4 டிகிரியாக பதிவு
    X

    டெல்லியில் வரலாறு படைத்தது வெயில்: 118.4 டிகிரியாக பதிவு

    தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 118.4 டிகிரி பாரன்ஹிட் வெப்பநிலை பதிவாகி மக்களை வாட்டி வதைத்துள்ளது.
    இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதிலும் வடக்கு மாநிலங்களில் வெப்ப நிலை குறைந்த பாடில்லை. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது.

    இன்று 118.4 டிகிரி பாரன்ஹிட் (48 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானதாக இந்திய வானிமை மையம் தெரிவித்துள்ளது. டெல்லி வரலாற்றிலேயே இதுதான் உச்சப்பட்ச வெப்பம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹிட்டிற்கு மேல் வெயில் அடிக்கிறது. வெயில் தாக்கம் குறைய இன்னும் ஒருவார காலம் ஆகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×