search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தான் பிறந்தபோது பிரசவம் பார்த்த நர்ஸை கோழிக்கோட்டில் சந்தித்து நெகிழ்ந்த ராகுல் காந்தி
    X

    தான் பிறந்தபோது பிரசவம் பார்த்த நர்ஸை கோழிக்கோட்டில் சந்தித்து நெகிழ்ந்த ராகுல் காந்தி

    சோனியா காந்தியின் தலைப்பிரசவத்தின்போது நர்சாக இருந்து உதவிய செவிலியை இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சந்தித்து, மகிழ்ந்தார்.
    திருவனந்தபுரம்:

    முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி - சோனியா தம்பதியரின் மூத்த மகனாக 19-6-1970 அன்று ராகுல் காந்தி பிறந்தார்.

    தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பதவி வகிக்கும் ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    வயநாடு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த இரு நாட்களாக ராகுல் காந்தி இங்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சுல்தான் பத்தேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று திறந்த வாகனத்தில் சென்று மக்களை சந்தித்த அவர் இன்று கோழிக்கோடு பகுதிக்கு வந்தார்.


    சோனியா காந்தியின் தலைப்பிரசவத்தின்போது நர்சாக இருந்து உதவிய செவிலி ராஜம்மா என்பவர் பணி ஓய்வுக்கு பின்னர் கோழிக்கோட்டில் இருப்பதை அறிந்த ராகுல் காந்தி அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து, அவரது வீட்டுக்கு சென்ற ராகுல் காந்தி, தனக்கு பிரசவம் பார்த்த ராஜம்மாவை கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    Next Story
    ×